Notifications

No notifications
We will send an invite after you submit!

Memories & condolences

Year (Optional)
Location (Optional)
Caption
YouTube/Facebook/Vimeo Link
Caption
Who is in this photo?
Or start with a template for inspiration
Cancel
By posting this memory, you agree to our Terms of Service and Privacy Notice.
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
Flower

Send flowers

Share your sympathy. Send flowers from a local florist to Panjalingam's family or funeral.

திரு.பஞ்சலிங்கம் செல்லப்பா அவர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராய், கரந்தனில் 1942 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 8 ஆம் நாள் பிறந்தார். இவர் “பஞ்சு” என்று அன்போடும் “முதலாளி” என்று மரியாதையுடனும் அழைக்கப்பட்டார். திரு.பஞ்சலிங்கம் அவர்கள் நல்லதெரு கணவனாகவும், தந்தையாகவும், மாமாவாகவும், பேரனாகவும், பூட்டனாகவும், மற்றும் நல்லதொரு மனிதனாகவும் வாழ்ந்து, தனது 82ஆவது வயதில், 2025 ஆம் ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி அதிகாலை தனது அன்பு மனைவியை ஆரத்தழுவி விடைபெற்றுவிட்டு, இளைய மகள் தர்சினி, மருமகன் துசி அருகாமையில் அவர்களது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.

இவர் இலக்ஷ்மிப்பிள்ளை-செல்லப்பா தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். இவர் மூன்று மூத்த சகோதரிகளும், நான்கு சகோதரர்களும் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது இளமைக்காலம் அவருடைய சகோதர, சகோதரிகளுடனும், சகோதரிகளின் பிள்ளைகளுடனும் மிகவும் அழகாக இருந்தது.

இவருடைய இளம் வயதிலேயே குடும்பத்தின் பொருளாதார சிரமங்களின் காரணமாக, குடும்பத்தைப் பிரிந்து இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி நகரத்திற்கு சென்று, அவருடைய சகோதரருடன் ஒரு வியாபார நிலையத்தில் வேலை செய்யத் தொடங்கினார். அங்கு அவர் தினசரி 12 மணி நேர வேலை செய்தார். ஏழு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து தந்தையாரின் குடும்பத்திற்கு ஆதரவளித்தார்

இவரது தந்தையின் எதிர்பாரத திடீர் மறைவினால் ஏற்பட்ட குடும்ப சோகமும், முதன்மைப் பொறுப்பும் அவரின் 18 ஆவது வயதிலேயே அவர் எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

1960 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் கோண்டாவிலில் தனது மாமாவுக்கு சொந்தமான ஒரு கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு அவர் அந்தக் கடையை சொந்தமாக வாங்கி, தனது தொழில் முயற்சியின் பலனாக வியாபாரத்தில் ஓர் மைல் கல்லை அடைந்தார்.

**திருமணம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் **

1967 ஆம் ஆண்டில், பொது நிகழ்வுகளில் அவரின் மனைவியின் அழகையும், திறமையையும் கண்டு அவர் மீது காதல் கொண்டார். இரு பக்க குடும்பத்தினரின் அனுமதியுடன், 1968 ஆம் ஆண்டு தனது 25 ஆவது வயதில் மனோகராணியை திருமணம் செய்து கொண்டார்.

1969 ஆம் ஆண்டில் அவர்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது.

1970 ஆம் ஆண்டு, இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த வேளையில் அவரின் மனைவியின் பெற்றோர் இருவரும் ஒரேநாளில் இறைபதம் எய்திய சோகம் அவரின் குடும்பத்தை ஆட்கொண்டது. அன்றிலிருந்து தன் மனைவியுடைய சகோதரர்களையும், தன் சொந்தச் சகோதரர்கள்போல் எண்ணி தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவரின் மனைவிக்கு பக்கபலமாய் இருந்தார்.

அதேவேளை தனது மூத்த அக்காவின் பிள்ளையையும் தனது வீட்டில் இருந்து படித்து படிப்பில் உயர வழி வகுத்துக் கெடுத்தார். கடின உழைப்பின் மகத்துவத்தை வாழ்க்கையில் காட்டினார்.

கோண்டாவிலில் வாழ்க்கை அமைத்தல்

1972 ஆம் ஆண்டில், திரு.பஞ்சலிங்கம் அவர்கள் கோண்டாவிலில் தனது முதல் சொந்த நிலத்தை வாங்கி, ஒரு சிறிய மண் வீட்டைக் கட்டினார். அதேசமயம், தனது கடையையும் நன்றாகச் செயல்படுத்தியதுடன், குத்தகைக்கு நிலம் எடுத்து அதிலே காய்கறி மற்றும் புகையிலை விவசாயத்தையும் செய்தார்.

1974 ஆம் ஆண்டிற்குள், குடும்பத்தில் ஐந்து குழந்தைகள் வரை இருந்ததால், அவர் ஒரு கல்வீட்டை கட்டத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டில் அதைக் கட்டி முடித்து குடும்பத்துடன் புதிய வீட்டில் குடியேறினார்.

போரினால் ஏற்பட்ட மாற்றம்

1985 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததால் தனது முதல் மூன்று குழந்தைகளையும் கனடாவுக்கு அனுப்பினார். 1987 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் போரின் காரணமாக குடும்பங்கள் இடப்பெயர்ந்தன.

தனது கடைசி இரு பெண் பிள்ளைகளின் நலன் கருதி

1991 ஆம் ஆண்டு திரு.பஞ்சலிங்கம் அவர்கள் தனது குடும்பத்தை முழுமையாக கனடாவிற்கு அழைத்துச் செல்லும் முக்கிய முடிவை எடுத்தார். 1991 ஆம் ஆண்டு இவரின் மூத்த மருமகன் மகள் அழைக்க கனடாவுக்கு குடும்பமாக வந்தார்.

கனடாவில் வாழ்க்கை

கனடாவில் தனது கடின உழைப்பையும் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் முழுமையாக அர்ப்பணித்தார். இவரும் இவருடைய மனைவியும் சேர்ந்து உழைத்ததின் பலனாக இவரின் கடைசி இரு மகள்களுக்கும் மிகவும் விமர்சையாய் திருமணம் செய்து வைத்தனர். இவர்களது குழந்தைகள் கல்வியில் முன்னேறி வாழ்வில் வெற்றியை அடைந்தனர். அவரது குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள, அவருக்கு பேரன்கள், பேத்திகள் ஆகியோர் சேர்ந்தனர். புதிதாகப் பிறந்து வந்த உறவுகளின் அன்பில் அவர்கள் மகிழ்ந்திருந்தார்கள்.

அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து உலகநாடுகள் பலவற்றிற்குப் பயணம் செய்து உல்லாச வாழ்க்கையையும் அனுபவித்தனர். பேரப்பிள்ளைகள் படிப்பில் உயர்ந்து பட்டங்கள் பெறும் போதெல்லாம் பெருமையின் உச்சத்துக்கே சென்று விடுவார். அவரின் கடைசி பேத்திமார் மூவரின் வளர்ச்சியையும் அன்பையும் கூடவே இருந்தது பார்த்து மகிழ்ந்தார். இவரின் முதல் மூன்று பேத்திகளின் திருமணத்தையும் பார்த்து மகிழ்ந்தார். அவர்களுடைய கணவர்களையும் தன்னுடைய பேரன்கள்போல் எண்ணி அன்பு செலுத்தினார்.

இவர் தனது 80 ஆவது வயதில், உடல் நலக்குறைவு காரணமாக வாகனம் ஓட்டுவதை நிறுத்தினார். ஆனால், குழந்தைகளும் பேரன் ,பேத்திகளும் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தனர். அவரின் இறுதிக் காலத்தில் அவரின் முதல் பேத்தி மூலமாய் அவருக்கு இரண்டு அழகான, அன்பான பூட்டப்பிள்ளைகள் கிடைத்தனர். இது அவரின் வாழ்க்கையை முழுமைப் படுத்தியது. அவர்களின் வருகையால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

திரு.பஞ்சலிங்கம் செல்லப்பாவின் வாழ்க்கை, அவரது தன்னலமற்ற காதல் அமைதி, மற்றும் பெருமிதமான முயற்சிகளால் அனைவருக்கும் ஈர்ப்பும், உணர்வும் அளிக்கிறது. அவரது மரியாதையும், விடாமுயற்சியும் அவரின் தலைமுறையினருக்கு எப்போதும் ஓர் எடுத்துக்காடாகத் திகழ்கிறது.

Life History of Panjalingam Chellappah

Birth and Early Life

Panjalingam Chellappah was born on March 8, 1942, in Urumpirai, Jaffna, Sri Lanka, to Chellappah Kasinathar and Luxmipillai Chellappah. He grew up in a large family with three sisters and four brothers.

He attended school in Urumpirai until grade 6, but at the age of 13, due to financial hardships, he moved to Galle, Sri Lanka, to work in a retail store. He worked tirelessly in 12-hour shifts for 7 years, supporting his family during difficult times.

Family Tragedy and Early Independence

At the age of 18, Panjalingam endured a devastating loss when his father was mistakenly shot and killed. By 1960, at the age of 20, he moved to Kondavil and worked in a retail store owned by his uncle. In 1965, through sheer determination and hard work, he purchased the store, marking the beginning of his entrepreneurial journey.

Marriage and Family Responsibilities

In 1967, Panjalingam attended a school sports event where he saw Manoharany, the woman who would become his wife. Deeply in love, he sought the approval of her relatives, and with the blessings of their families, they married in 1968 when he was 25 years old.

The couple had their first child in 1969, and as they were expecting their second child in 1970, tragedy struck again. Both of his in-laws committed suicide on the same day. This event left him with the responsibility of caring for his wife’s five siblings. He did his best to support the family along with others.

Building a Life in Kondavil

In 1972, Panjalingam purchased his first plot of land in Kondavil and built a modest hut made of mud and coconut leaves for his family. Alongside running his store, he expanded his ventures into farming, cultivating vegetables and tobacco on leased farmland. By 1974, the family had grown to five children, prompting him to construct a brick-and-mortar home, which he completed in 1979. The family moved into their new home, providing stability and comfort for his growing household.

War and Resettlement

In 1985, as the Sri Lankan Civil War escalated, Panjalingam sent his two eldest children to Canada to ensure their safety and provide them with better opportunities. By 1987, his family was forcibly displaced from their home due to intense fighting. They sought refuge in a temple but were turned away due to nearby bombing. Eventually, they found temporary shelter in a school in Jaffna for a month until the conflict subsided.

In 1991, Panjalingam made the life-altering decision to move his entire family to Canada. This marked a turning point, as the family reunited and began rebuilding their lives in a new country.

Life in Canada

In Canada, Panjalingam continued his legacy of hard work and dedication. He supported his children’s education and helped them build successful futures. His family grew as his children married and had children of their own. Panjalingam and his wife traveled the world together, enjoying life and the fruits of their sacrifices.

Later Years and Legacy

At the age of 80, Panjalingam stopped driving due to health issues. His children and grandchildren ensured he remained active and connected, taking him wherever he wanted to go. Surrounded by his loving family, including children, grandchildren, and great-grandchildren, he enjoyed his final years in peace.

On January 6, 2025, Panjalingam Chellappah passed away peacefully in his bed, surrounded by his beloved wife and family.

Legacy

Panjalingam’s life is a testament to resilience, love, and selflessness. He rose from humble beginnings to become a successful entrepreneur, a devoted husband, and a pillar of support for his family. His unwavering commitment to his loved ones and his ability to overcome immense challenges continue to inspire his descendants.













Helping hands

Add to his legacy

Please consider a donation to any cause of your choice.
பஞ்சு மாமாவின் நெஞ்சுநிறை சில நினைவலைகள்

கரந்தனில் செல்லப்பா-இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளிற்கு மூன்று மூத்த பெண் பிள்ளைகளின் பின்னர் பிறந்த “ஐந்து லிங்கங்களில்” பஞ்சலிங்கம் மூன்றாவது லிங்கம். குடும்பத்தில் எட்டுப் பிள்ளைகள்> பெரிய குடும்பம் என்று யாரும் பேசுவதில்லை. ஏனென்றால் அநேகமான குடும்பங்களில் கடவுள் கொடுத்த பிள்ளைகளின் எண்ணிக்கை இப்படித்தான் இருக்கும். சிறிது கறுப்பான நிறமுடைய பேரனார் செல்லப்பாவின் நிறத்தை பிள்ளைகள் நால்வர் பெற்றனர். “மா” நிறமான பேத்தியார் இலட்சுமிப்பிள்ளையின் நிறத்தை நால்வர் பெற்றனர். அதிலே “பஞ்சு மாமா”வும் ஒருவர்.
கரந்தனிலிருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவிலிருக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலைக்கு தினமும் நடந்து செல்லும் பத்துப்போர் கொண்ட சிறுவர் குழாமை அழைத்துக்கொண்டு செல்வதற்குத் தலைமை தாங்கியது பஞ்சு மாமாதான். தயங்கித்தயங்கி நடந்தால் தலையில் ஓர் குட்டு விழும். பாடசாலைக்குத் தாமதமாகப் போனால் எல்லோருக்கும் குட்டு விழும்.
இள வயதிலிருந்தே எமக்கும் பொருள் சேர்க்கும் ஆர்வத்தை தூண்டியவர். “சைக்கில்” ஓட்டும் வயதில் இருபத்தைந்து சதம் எம்மிடமிருந்து பெற்று சைக்கில் பழக்கியதும் பஞ்சு மாமாதான். “இலவசமாக ஏதுமில்லை” என்ற தத்துவத்தை அன்றே கடைப்பிடித்தது மட்டுமல்லாமல் எமக்கும் கற்றுக் கொடுத்தார்.
காலியில் தனது கடின உழைப்பை ஆரம்பித்த போதும் பேரானார் கட்டிய கல் வீட்டில் ஓர் புதிய வானொலிப் பெட்டியை முதன்முதலில் வாங்கிவந்து வைத்து அழகு பார்த்தவர் பஞ்சு மாமாதான். தினமும் வானெலியைக் கேட்க நாம் அங்கே படையெடுத்ததும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. 1958 இனக்கலவரத்தின்போது “எல்லோரும் வந்துவிட்டார்கள் ஆனால் பஞ்சனைக் காணவில்லை” என்று எனது அம்மா தவித்ததையும்> பின்னர் நேரே வந்து நின்றபோது அடைந்த மகிழ்ச்சியையும் இன்றும் எண்ணிப் பார்க்கிறேன்.
கோண்டாவில் சந்தியில் தனது வியாபார நிலையத்தை ஆரம்பித்து நடாத்தினார். எத்தனையோ பெரிய கடைகள் அங்கே இருந்தபோதும் தைப்பொங்கல் முதல் நாள் இவருடைய கடையில் மக்கள் பெருமளவில் கூடிப் பொருட்களை வாங்கியதுபோல் வேறெந்தக் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்ததை நான் காணவில்லை.
மனோகரா மாமியின் பெற்றோர்கள் ஒரே நாளில் இவ்வுலகைவிட்டுப் போனபோது இடிந்தே போய்விட்டார். கோண்டாவிலையே உலுக்கிய அச்சம்பவம் என் அடி மனதில் இன்றும் அப்படியே உள்ளது. இருவரையும் தீயில் சங்கமிக்க வைத்துவிட்டு வீடு திரும்பியபோது திரும்பத்திரும்ப அக்காட்சியையே பார்த்துக்கொண்டு நின்றார். நான் பஞ்சு மாமாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். நொந்த இதயத்தில் இடிந்துபோன கனவுகளோடு அவர் அங்கே நின்ற காட்சி கண்களைவிட்டு இன்னும் அகலவில்லை.
என்னைப்பற்றி எப்போதும் உயர்வாகவே பேசுவார். ஆனால் நான் அப்படி எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. பஞ்சு மாமா அணிந்த பட்டு வேட்டி சால்வைகளை அணிந்துகொண்டு நான் மேடையில் அப்பாவாக நடித்திருக்கிறேன். அன்று அந்தப் பட்டு வேட்டி சால்வைகளை யாரோ திருடிக்கொண்டு போனபோதும் அவற்றைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
பிறந்ததிலிருந்து ஒன்றாகவே வளர்ந்தோம். எமக்கென்றொரு வாழ்க்கையை அமைத்து எங்கெங்கோ வாழ்ந்தபோதும் உறவாகவே இருந்தோம். உலக வாழ்வின் நியதியின்படி ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு நீத்தும்போது இதயம் கனக்கின்றது. அதற்காகவே கனடாவிற்கு ஓடிவந்தேன். அன்பான மனைவி அருமையான பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகளுடன் ஓர் மனநிறைவான மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்த “பஞ்சு மாமா” வின் சில நினைவுகளைப் பகிரச் சந்தர்ப்பம் தந்தவர்களுக்கும் நன்றி.
 “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
 பெருமை படைத் திவ்வுலகு”
எம்.ரி.செல்வராஜா (மருமகன்)
இலண்டன். 30.01.2025











சித்தப்பா...

சித்தப்பா, நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை மனம் இன்னும் ஏற்க மறுக்கின்றது. இரண்டு நாட்களுக்கு முன்பும் எங்களுடைய ஒன்று கூடலில் நீங்கள் சுறுசுறுப்பாக பங்குபற்றி, பெயர் சொல்லி அழைத்து, கட்டியணைத்து, கதைத்து பழகியது இப்போதும் என் மனத்திரையில் கலங்காமல் தெரிகின்றது.

அதற்குள் ஏன் இந்த அவசரம் சித்தப்பா!

சிறுவயதில் பாடசாலை விடுமுறை நாட்களில் சித்தப்பா வீட்டிற்கு போவதென்றால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அப்பா சைக்கிளில் எங்களை ஏற்றிக்கொண்டு சித்தப்பா வீட்டிற்கு போவார். சித்தப்பா நிறைய சிறுகதைகள் சொல்லித்தருவார். நாவற்குழியில் இருந்து வந்ததென்று கவனிப்பு மிகுந்த அமோகமாக இருக்கும். நல்ல சாப்பாடு, பழங்கள், இனிப்புகள் என்று... இப்பவும் வாய் ஊறுகின்றது.

சித்தப்பா வீட்டு ஓட்டின்மேல் இலகுவாக ஏறலாம். அப்படி ஏறி விளையாடும் போது காயங்களும் வருவதுண்டு. ஆனாலும் சித்தப்பா அடிக்கமாட்டார், கனிவாகக் கண்டிப்பார்.

கனடாவிற்கு வந்து சில வருடங்களிலேயே அப்பாவை இழந்து விட்டோம். ஆனாலும் சித்தப்பாவை சந்திக்கும்போது அப்பாவை காண்பது போன்ற ஒரு ஆசையும் மன நிறைவும் ஏற்படும். அதேபோலத்தான் சித்தப்பாவுக்கும். எங்களை காணும் போதெல்லாம் முகத்தில் ஒரு பூரிப்பு தெரியும்; மனதில் ஒரு புதிய தெம்பு வரும்.

அருகில் இருத்தி வைத்து நலம் விசாரிப்பார்; பழைய கதைகள் நிறைய சொல்வார்; அதற்குள் அப்பா மற்றும் ஏனைய சித்தப்பாக்களின் ரகசியங்களும் அடங்கும். சித்தப்பா கதை சொல்லும் பாங்கு மிகுந்த சுவாரசியமாக இருக்கும். எழும்பிப் போகவே மனம் வராது.

சித்தப்பா படிப்பு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினாராம். சிறுவயதிலேயே குடும்ப பொறுப்புகளையும் ஏற்று வழி நடத்தினார் என்று அறிந்தோம். திருமணத்திற்குப் பின்பும், சித்தியின் பெற்றோர் இளம் வயதிலேயே இறந்த பிறகு, சித்தப்பாதான் குடும்ப சுமையை பொறுப்பாகவும் துணிவாகவும் தன்னுடைய தோளில் சுமந்து எல்லோரையும் நன்கு கரை சேர்த்தார் என்று அறிந்தோம். இவ்வாறான சிறந்த குடும்ப பொறுப்பும் தலைமைத்துவ பண்பும் கொண்டவர் தான் எங்கள் சித்தப்பா.

கனடாவிற்கு வந்த பிறகு, வேலையில் இருந்து ஓய்வுபெறும் வயது வந்த பிறகும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருந்தார்; தொடர்ந்தும் வேலை செய்ய விரும்பினார்.

இயலாத வயதை எட்டிய பிறகும் தன்னுடைய வேலைகளை எவருடைய உதவியும் இன்றி தானே செய்ய விரும்பினார்.

சித்தப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த எமது செல்லப்பா பெரிய குடும்பத்தின் ஒன்று கூடலின் போதும்கூட, மிகவும் அசாத்தியமான துணிவுடனும் சுறுசுறுப்புடனும் இருந்தார். நடந்த நிகழ்வுகளில் தானாகவே முன்வந்து கலந்து கொண்டார். சிறு உரையும் ஆற்றினர். இவ்வாறான ஒன்று கூடல்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அதனை ஒற்றுமையாகவும் மகிழ்வாகவும் தொடர்ந்து செய்ய வேண்டியதன் தேவையையும் அழுத்தி உரைத்தார். அது எங்களுடைய இருபத்தி மூன்றாவது ஒன்று கூடலாக இருந்தது. செல்லப்பா ஒன்று கூடல் தொடர்ந்து இவ்வளவு காலமும் நடைபெறுவதற்கு சித்தப்பாவும் ஒரு முக்கிய காரணம். சித்தப்பாவினுடைய அந்த இறுதி உரை முக்கியமாக அவருடைய பேரப்பிள்ளைகள் வயதுடைய சந்ததிக்கானதாகும்.

கனடாவில் தன்னுடைய வாழ்வை திருப்திகரமாக வாழ்ந்து பேரப்பிள்ளைகள் எல்லோருடைய படிப்பும் முடிந்து, பூட்டப் பிள்ளைகளையும் கண்டுவிட்டார். நல்லதோர் மகனாக, சகோதரனாக, கணவனாக, அப்பாவாக, பாட்டனாக, பூட்டனாக வாழ்வாங்கு வாழ்ந்து எங்கள் எல்லோருக்கும் சித்தப்பாவாக வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றார்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்."

என்ற திருக்குறளுக்கு ஏற்ப வாழ்வாங்கு வாழ்ந்த சித்தப்பா இப்போது எங்கள் எல்லோருக்கும் தெய்வமாகக்தான் தெரிகிறார்.

சித்தப்பா எங்களை விட்டுப் பிரிந்தாலும், அவருடைய இனிய நினைவுகள் எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும். சித்தப்பா மறைந்ததை நினைத்து கவலைப்படாமல் அவர் நிறைவாக வாழ்ந்து காட்டிய பாதையில் வாழ்வதே சாலச் சிறந்தது.

என்றும் உங்கள் இனிய நினைவுகளுடன்,

உங்கள் மகன் வினோ.

Want to see more?

Get notified when new photos, stories and other important updates are shared.

Get grief support

Connect with others in a formal or informal capacity.
×

Stay in the loop

Panjalingam Sellappah